மதிதவழ் கிரண மலைச்சிகரமெங்கும்
மன்னு புகழ் மலர் மணம் வீசி நிற்கும்
மாண்புடன் மாணவர் மாட்சிமை பெற வைத்து
மதிப்பினில் நிலையாய் உயர்ந்து நிற்கும்
எங்கள் இந்து தேசிய கல்லூரி
எம்மை ஏற்றம் பெற வைக்கும் கல்லூரி
அகவிருள் அகற்றி அறிவொளி பரப்பி
அறவழி அன்புடன் வழி நடத்தி
ஆற்றல் பலதந்து ஆளுமையோடெம்மை
ஆக்கி வைக்கும் நல் ஆலயமாம்
எங்கள் இந்து தேசிய கல்லூரி
எம்மை ஏற்றம் பெற வைக்கும் கல்லூரி
கல்வியினோடு கவின்கலைகள் பயிற்றும்
கலங்கரை விளக்கமாம் கல்லூரி
வித்தைகளோடு விழுமியங்கள் தந்து
வித்தகராய் எம்மை விளங்கிடவே வைக்கும்
எங்கள் இந்து தேசிய கல்லூரி
எம்மை ஏற்றம் பெற வைக்கும் கல்லூரி
அர்ப்பணிப்புடனும் அகவொளியுடனும்
அயராது உழைக்கின்ற நல்லதிபர்
அஞ்ஞானம் அகற்றி அருவழி காட்டிடும்
அறிவொறி வீசும் நல்லாசான்களும் கொண்ட
எங்கள் இந்து தேசிய கல்லூரி
எம்மை ஏற்றம் பெற வைக்கும் கல்லூரி
நாளை நம் உலகம் சாதனை படைத்திடும்
நாம் அதன் கர்த்தா நம்பிடுவோம்
சிந்தையில் தெளிவும் செயலதில் உறுதியும்
சீலமும் கொண்டுயர்ந்தோம் நன்றி சொல்வோம்
எங்கள் இந்து தேசிய கல்லூரி
எம்மை ஏற்றம் பெற வைக்கும் கல்லூரி




